ETV Bharat / bharat

ஆம்புலன்ஸ் வசதியில்லாததால் 23 கி.மீ., மருத்துவமனைக்கு நடந்து சென்ற கர்ப்பிணிப் பெண்! - துர்ரிமர்க்கா கிராமம்

மும்பை: தனது கிராமத்தில் அடிப்படை மருத்துவ வசதிகள் ஏதுமில்லாத காரணத்தினால், கர்ப்பிணிப் பெண் ஒருவர் மருத்துவம் பார்ப்பதற்காக 23 கி.மீ., நடந்து சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

pregnant-woman-walks-23-km-to-reach-hospital-in-gadchiroli

author img

By

Published : Jul 11, 2020, 2:21 PM IST

மகாராஷ்டிரா மாநிலம், காட்சிரோலி மாவட்டம், துர்ரிமர்க்கா கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஷ்னி போடாடி. கர்ப்பிணியான இவர் அடிப்படை மருத்துவ வசதிகளும், சாலை வசதிகளும் இல்லாத தனது கிராமத்திலிருந்து மருத்துவம் பார்ப்பதற்காக 23 கி.மீ., நடந்தே சென்றுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'எங்கள் கிராமத்தில் முறையான மருத்துவ வசதிகளும், அடிப்படை சாலை வசதிகளும் கிடையாது. பிரசவ வலியால் அவதியுறும் பெண்களை அவசர ஊர்தி மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லலாம் என எண்ணினாலும் அதற்கான சாலை வசதி கிடையாது. பேறு கால வலியால் தான் துன்புறக்கூடும் என எனது குடும்பத்தினரிடம் கூறியபோதும், அவர்கள் பெரிதாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இந்நிலையில், சமூக செயற்பாட்டாளர் ஒருவரின் அறிவுறுத்தலின்படி, தனது கிராமத்திலிருந்து 23 கி.மீ., தொலைவிலுள்ள லகாரி மருத்துவ மையத்திற்கு, காட்டு வழியாக நடந்தே வந்தடைந்தோம்’ என்றார்.

பின்னர், இவர் பிரசவத்திற்காக லகாரி மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்ட அதே நாளில் பெண் குழந்தை ஒன்றைப் பிரசவித்துள்ளார்.

கர்ப்பிணி பெண்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காகவும், கிராமப் புறங்களில் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் அவதியுறும் கர்ப்பிணிகளுக்கு உதவும் வகையிலும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக லகாரி மருத்துவ மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு கர்ப்பிணிப் பெண்களுடன் அவர்களது உறவினர்கள் தங்க வைக்கப்பட்டு, மூன்று வேளை இலவசமாக உணவு வழங்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.