பெங்களூரு: கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்திலுள்ள சபந்தனா ஸ்வதாரா மையம் சார்பில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான இரு கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் 17 வயதுடைய சிறுமியும், மற்றொருவர் மாற்றுத்திறனாளியும் ஆவார்.
இந்த மாற்றுத்திறனாளி பெண்ணை, நில உரிமையாளர் ஒருவர் ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அப்பெண் ஸ்வதாரா மையத்தில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில், ஏழு மாதங்கள் நிரம்பிய இரு கர்ப்பிணிகளுக்கும் அந்த மையத்தின் நிர்வாகிகள், அப்பகுதியினர் இணைந்து வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மட்டும் 18-26 வயதுக்குள்பட்ட பெண்களில் 11 விழுக்காட்டினர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக, திருமணமான பெண்கள், அவர்களது கணவராலேயே துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப சுகாதாரக் கருத்துக்கணிப்பில், கர்நாடகாவில் 2015-20216 காலகட்டத்தில் 20.6 விழுக்காடு திருமணமான பெண்கள் கணவரால் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழுக்காடு 2019-2020 காலகட்டத்தில் 44.4 ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: புத்தாண்டு தினத்தன்று பிறந்த குழந்தைகள் குறித்து யுனிசெப் அமைப்பு தகவல்