ETV Bharat / bharat

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம்!

author img

By

Published : Aug 12, 2020, 9:33 AM IST

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

Pranab Mukherjee's health worsens on ventilator support Pranab Mukherjee Army Hospital Mamata Banerjee Sharad Pawar M K Stalin Piyush Goyal Ram Nath Kovind பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம் பிரணாப் முகர்ஜி உடல்நிலை முன்னாள் குடியரசுத் தலைவர் ராணுவ மருத்துவமனை ராம்நாத் கோவிந்த் மமதா பானர்ஜி சரத் பவார் மு.க. ஸ்டாலின்

டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஆக.10ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி கான்ட் பகுதியிலுள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

முன்னதாக, பிரணாப் முகர்ஜி பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். மேலும் அரசியல் தலைவர்கள் பலரும் ட்வீட் செய்திருந்தனர்.

  • President Kovind spoke to @Sharmistha_GK and inquired about the health of her father, the former President Shri Pranab Mukherjee who is hospitalised after being tested positive for COVID-19. The President wished him a speedy recovery and good health. @CitiznMukherjee

    — President of India (@rashtrapatibhvn) August 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில், “முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஸ்தா முகர்ஜியை தொடர்புகொண்டு பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன். கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ள அவர், பூரண குணமுற்று விரைந்து வீடு திரும்ப என் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலும், “முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கோவிட்-19 பாதிப்பிலிருந்து விரைவாக மீள வாழ்த்துகள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், பிரணாப் முகர்ஜி விரைந்து குணமடைந்து வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

  • Wishing former President Shri Pranab Mukherjee a speedy recovery.

    — Rahul Gandhi (@RahulGandhi) August 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டரில், “முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விரைந்து குணமாக என்னுடைய வேண்டுதல்கள். நான் உறுதியாக நம்புகிறேன், அவர் பூரண குணமுற்று வீடு திரும்புவார். அவர் ஆரோக்கியம், வலிமை பெற வாழ்த்துகள்” எனத் தெரிவித்திருந்தார்.

  • I pray for the well being and speedy recovery of Shri Pranab Mukherjee.

    I am confident he will be successful in recovering from the virus quickly. Wishing him strength and good health https://t.co/56TESwSUJs

    — Piyush Goyal (@PiyushGoyal) August 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேற்கு வங்காள முதலமைச்சர் மமதா பானர்ஜி ட்விட்டரில், “முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார் என அறிந்து கவலையுற்றேன். அவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்திக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

  • Concerned to hear about Former President Pranab Mukherjee Da testing positive for #COVID19. My prayers are with him & his family during this time and I wish him a speedy recovery. https://t.co/KbAvxqi7Oz

    — Mamata Banerjee (@MamataOfficial) August 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதேபோல், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரும் ட்விட்டரில், “பிரணாப் முகர்ஜி விரைந்து குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளனர்.

84 வயதான பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு தற்போது உயிர் பாதுகாப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க: உயிருக்குப் போராடும் பிரணாப் முகர்ஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.