ETV Bharat / bharat

தொடர்ந்து கோமா நிலையில் இருக்கும் பிரணாப் முகர்ஜி! - பிரணாப் முகர்ஜி

டெல்லி : குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், தொடர்ந்து அவர் கோமா நிலையில் இருந்து வருவதாகவும் ராணுவ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Pranab Mukherjee in deep coma and on ventilator support - Army Hospital

author img

By

Published : Aug 23, 2020, 1:19 PM IST

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு (வயது 84) கடந்த 10ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லி கான்ட் பகுதியிலுள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சில நாட்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பிரணாப் முகர்ஜி கோமாவில் இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இன்று (ஆக. 23) இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ராணுவ மருத்துவமனை நிர்வாகம், “பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை. அதனால் தொடர்ந்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, தொடர்ந்து அவர் கோமா நிலையிலேயே இருக்கிறார். ஆனால் முக்கிய உடற்பாகங்கள் செயல் நிலையில் உள்ளன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...படப்பிடிப்புகள் நடத்த மத்திய அரசு அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.