ETV Bharat / bharat

டெல்லி காற்று மாசுக்கான காரணம் : பிரகாஷ் ஜவடேகர் - அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து மோதல்

டெல்லியில் ஏற்படும் காற்று மாசுக்கு விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவது முக்கியக் காரணமில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளதை, அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

Prakash Javadekar
Prakash Javadekar
author img

By

Published : Oct 15, 2020, 5:29 PM IST

தேசியத் தலைநகர் பகுதியில் காற்றின் தரம் கடந்த சில ஆண்டுகளாகவே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விவசாயிகள், விவசாயக் கழிவுகளை எரிப்பதே டெல்லியில் காற்று மாசு ஏற்பட முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவதால் டெல்லியில் வெறும் நான்கு விழுக்காடு மட்டுமே காற்று மாசு அதிகரிக்கிறது. மீதமுள்ள 96 விழுக்காடு, உள்ளூர் காரணிகளான தூசி, கட்டுமானப் பணிகள், குப்பைகளைக் கொட்டுதல், கட்டட இடிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றால் ஏற்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், காற்று மாசு குறித்து கண்காணிக்க 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆராய்ந்து இரண்டு மாதத்திற்குள் அறிக்கை சமர்பிக்கவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் இந்தக் கருத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மறுப்பு எதற்கும் உதவாது. விவசாயக் கழிவுகளை எரிப்பதால் வெறும் நான்கு விழுக்காடு மட்டுமே காற்று மாசு ஏற்படுகிறது என்றால், கடந்த 15 நாள்களில் காற்று மாசு திடீரென்று அதிகரித்தது ஏன்?

  • Staying in denial will not help. If stubble burning causes only 4% pollution, then why has pollution suddenly increased last fortnite? Air was clean before that. Same story every yr. There’s no massive jump in any local source of pollution in last few days to cause this spike? https://t.co/nxdJ2timv0

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) October 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதற்கு முன்புவரை காற்று சுத்தமாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் இதே கதைதான். காற்று மாசு அதிகரிக்கும் வகையில் கடந்த சில நாள்களில் டெல்லியில் எந்த நிகழ்வும் நடைபெறவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : மூன்று மாதங்களுக்கு டிஆர்பியை வெளியிடப்போவதில்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.