ஒடிசா மாநிலத்தின் பட்டசித்ரா ஓவியங்கள் துணியில் மை கொண்டு வரையும் பழங்கால ஓவிய முறையாகும். இந்த முறையில் சற்று புதுமையை புகுத்திய பாக்கியஸ்ரீ சாஹு, கல், பாட்டில் போன்ற உபயோகமில்லாத பொருள்களில் வண்ண ஓவியங்களை தீட்டி தனது வீட்டையே கலைக்கூடமாக மாற்றியுள்ளார்.
இரும்பு நகரம் என அறியப்படும் ரூக்கேலா மாவட்டத்தைச் சேர்ந்த பாக்கியஸ்ரீ முதுகலை தொழில்நுட்பம் பயின்றுவருகிறார். இவருக்கு ஓவியம் வரைவதில் பெரும் ஆர்வம் உண்டு. அந்த ஆர்வம் தான் அவரை தேசிய அளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இறைவன் ஜெகன்நாதரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு பட்டசித்ரா ஓவியக் கலையை கற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளார்.
![Pattachitra](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10473641_ey.jpg)
கல், தூக்கி எறியப்பட்ட கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட பல கழிவுப்பொருள்களை சேகரித்து அதில் பட்டசித்ரா ஓவியங்களை தீட்டி, சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். இதைக் கண்டு வியந்த பலரும், தங்களுக்கும் வேண்டும் என பாக்கிஸ்ரீயிடம் கேட்டுள்ளனர். நாளடைவில் அவருக்கு ஆர்டர்கள் அதிகரித்துள்ளன.
ஒரு பாட்டிலை பாக்கியஸ்ரீ கையிலெடுத்தால் 8 மணி நேரத்தில் அதில் பட்டசித்ரா ஓவியம் மிளிரும். சமீபத்தில் நேதாஜி சந்திர போஸுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கல்லில் அவரது உருவத்தை வரைந்திருந்தார். இதையறிந்த பிரதமர் மோடி நேற்று ஒலிப்பரப்பாகிய மன் கி பாத் நிகழ்ச்சியில், பாக்கிஸ்ரீயின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு தனது ஆசிர்வாதங்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கற்பித்தலில் புதுமை - பிரதமர் மோடி பாராட்டிய ஆசிரியர் திலீப் சிறப்பு பேட்டி!