கர்நாடகா மாநிலத்தில் இதுவரை கரோனா தொற்றுக்கு மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஐந்து பேர் குணமாகி உள்ளனர். இந்நிலையில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 68 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்துப்பட்டுள்ளனர்.
கரோனா உறுதி செய்யப்பட்ட 12 பேரில் 11 பேர் முன்பே கரோனா தொற்று இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் லண்டன் பயணம் மேற்கொண்டு வந்துள்ளார். மேலும் அவர் ஏற்கனவே கரோனா தொற்று இருந்தவரின் மகன் என்பது தெரியவந்துள்ளது.
தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி தொடங்கியுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 21 பேரில் 41 பேர் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள்.
கர்நாடகா மாநிலத்தில் கரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த, வரும் நாள்களில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜவைத் அக்தர், கரோனா தொற்றை விரைவாக கண்டறியும் ஒரு லட்சம் சோதனைக் கருவிகள் கொண்டுவர அரசு விரைவு நடவடிக்கை எடுக்கிறது என்றார். இந்தக் கருவிகளை ஆர்டர் செய்வதற்கு முன்பு அதன் துல்லியம் குறித்து கவனித்துவருவதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க... கரோனா அச்சுறுத்தல்: தெலங்கானாவை முடக்க உத்தரவு