ETV Bharat / bharat

ஒருவழிப் பாதையில் வந்தவரை தாக்கிய காவலர்! வைரல் வீடியோ - Social Media

புதுச்சேரி: மரப்பாலம் அருகே ஒருவழிப் பாதையில் வந்தவரை போக்குவரத்து காவலர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

video
author img

By

Published : Jul 17, 2019, 4:27 PM IST

புதுச்சேரியிலிருந்து கடலூர் செல்லும் பிரதான சாலையில் உள்ள மரப்பாலம் பகுதியில் எப்பொழுதும் போக்குவரத்து அதிகம் காணப்படும். குறிப்பாக காலை 8 மணி முதல் 10 மணிவரை அப்பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் என்பதால் அங்கு இரண்டு போக்குவரத்து காவலர்கள் பணியில் இருப்பர்.

இந்நிலையில், அங்கு இன்று காலை அந்தப்பகுதியில் உள்ள தேங்காய்திட்டு பகுதிக்கு செல்வதற்காக ஒருவர் ஒன் வே-யில் வந்துள்ளார். இதனைப் பார்த்த போக்குவரத்து காவலர் அவரிடம் பேசியபோது அவர் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.

இதனால் கோபமடைந்த காவலர் அவரை சரமாரியாக தாக்கினார். சிறிது நேரத்தில் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த காவலரின் உறவினரும் அவரை சரமரியாகத் தாக்கினார்.

காவலர் தாக்கும் வீடியோ வைரல்

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் 'போக்குவரத்து காவலர் இரக்கமின்றி ஒருவரை தாக்குகிறார். இதனை அனைவரும் பகிருங்கள்' என பரவிவருகிறது. இது குறித்து போக்குவரத்து அலுவலர்களிடம் கேட்டபோது குடிபோதையில் தகராறு செய்ததால் அவர் தாக்கப்பட்டார் என்றும், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.