புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு படிப்பு, முதுநிலைப் படிப்பு, பிஹெச்.டி, முதுநிலை பட்டயப் படிப்பு உள்ளிட்ட பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இங்கு நாடு முழுவதிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்தப் பல்கலைக்கழகத்தின் 2020- 21ஆம் கல்வி ஆண்டுக்கான படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்கு நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் பங்கேற்க, ஆன்லைன் பதிவு நேற்று(ஜூலை 8) தொடங்கியது. பதிவு செய்வதற்கு வரும் 31ஆம் தேதி கடைசி நாளாகும்.
அடுத்த மாதம் ஆகஸ்ட் 21, 22, 23 ஆகிய தேதிகளில்; நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் தேர்வு நடத்தப்பட உள்ளது.
மேலும்,முதுநிலை படிப்புக்கு பட்டியலின சமூகத்தினருக்கு ரூபாய் 300, மற்றவர்களுக்கு ரூபாய் 600 எனவும்; பிஹெச்.டி படிப்புக்கு பட்டியலின சமூகத்தினருக்கு ரூபாய் 500, மற்றவர்களுக்கு ரூபாய் 1000 எனவும், எம்பிஏ படிப்புக்கு பட்டியலின சமூகத்தினருக்கு ரூபாய் 500, மற்றவருக்கு ரூபாய் 1000 எனவும் விண்ணப்பக் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.