புதுச்சேரி ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸ்க்கும் சட்டப்பேரவைக்கு எதிரே உள்ள பாரதி பூங்காவில் அழகாய் அமந்துள்ளது ஆயி மண்டபம்.
இந்த மண்டபத்தின் பெயருடைய ஆயி என்பவர் தேவதாசி பெண். பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராவர். அப்படி கடந்த 16ஆம் நூற்றாண்டில் பேரரசர் கிருஷ்ணதேவராயர் வேலூர் பயணத்தை முடித்துவிட்டு புதுச்சேரி உழவர்கரையில் உள்ள தனது ஆதரவாளர் உய்யகுண்ட விசுவராயரை பார்க்க வந்தார்.
அப்போது புதுச்சேரி முத்திரைப்பாலயத்தில் இருந்த ஒரு மாளிகையை கோயில் என நினைத்து வணங்கினார். ஆனால், அருகில் இருந்தவர்கள் அதுதாசியின் வீடு என்றனர். இதையடுத்து சினம் கொண்ட மன்னர் அந்த மாளிகையை இடிக்க உத்தரவிட்டார். பின்னர், தான் ஆசையாக கட்டிய மாளிகையை தானே இடிப்பதாகவும், அதற்கு கால அவகாசமும் தேவதாசி ஆயி கேட்டார். அதை மன்னரும் ஏற்றார்.
இதையடுத்து தான் ஆசையாக கட்டிய மாளிகையை அழித்ததுடன் அந்த இடத்தில் தனது செல்வத்தை கொண்டு மக்களுக்காக ஒரு குளத்தை ஆயி உருவாக்கினர். இந்தக் குளம் புதுவை மக்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக அமைந்தது.
அதன் பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் புதுவையில் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி அமர்ந்தனர். அப்போது தண்ணீர் பிரச்னையை தீர்க்க அப்போதைய கவர்னர் போன்டெம்பஸ், பிரான்ஸ்சில் ஆட்சி செய்த அரசுக்கு கடிதம் எழுதினார். அதை அடுத்து மூன்றாம் நெப்போலியன் உத்தரவின்பேரில் பொறியாளர் லாமைரெஸ்சே புதுச்சேரி வந்தார்.
16ஆம் நூற்றாண்டில் ஆயி வெட்டிய முத்தரைபாளையத்தில் உள்ள குளத்தில் இருந்து நீளமான வாய்க்கால் வெட்டி தற்போதைய பாரதி பூங்கா வரை கால்வாய் அமைத்து, அதன் மூலம் புதுவைக்குத் தண்ணீர் வந்தது. புதுவை தண்ணீர் பிரச்னை தீர்ந்தது தொடர்பாகவும், பொறியாளரை கௌரவிக்க அனுமதி கேட்டு ஆளுநர், மூன்றாம் நெப்போலியனுக்கு கடிதம் எழுதினார்.
தாசி குலத்தில் பிறந்து தனது ஆசை மாளிகையை மன்னர் உத்தரவில் இடித்து விட்டு, மக்களுக்காக அந்த இடத்தில் குளத்தை வெட்டிய ஆயின் சிறப்பை வியந்த மூன்றாம் நெப்போலியன் புதிய ஒன்றை உத்தரவை பிறப்பித்தார். அதன்படிதான் 18ம் நூற்றாண்டில் உருவானது ஆயி மண்டபம்.
கிரேக்க ரோமானிய கட்டிடக் கலை அம்சத்துடன் வெள்ளை நிறத்தில் பார்ப்பவரைக் கவரும் விதத்தில் அமைந்தது ஆயி மண்டபம். பிற்காலத்தில் ஆயி மண்டபத்தின் சுற்றி பாரதி பூங்கா அமைந்தது. ஆனால், தற்போது அது அரசு சின்னமாக அரசு அறிவித்திருந்தாலும், கேட்பாரற்று சிதலடைந்து காணப்படுகிறது வேதனை அளிப்பதாக தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.
புதுச்சேரி முத்தரபாளையம் பகுதியைச் சேர்ந்த சங்கர் கூறுகையில், “வரலாற்று பெயர்பெற்ற ஆயி உருவாக்கிய குளத்தில், நான் சிறுவயதில் குளித்து உள்ளேன். புதுச்சேரிக்கு இக்குளம் மூலம் குடிநீர் சென்றது.
நாளடைவில் குளத்தை ஆக்கிரமித்து வீடுகளில் கழிவுநீர் குளத்தில் விட்டனர். மேலும் அருகில் உள்ள ஊசுட்டேரி நிரம்பிய தண்ணீர் குளத்திற்கு வரும் தற்போது ஆக்கிரமிப்பு வாய்க்கால்கள் அடைக்கப்பட்டதால், நீர் ஆதாரமின்றி குளம் வறண்டு போய் உள்ளது.
எனவே அரசு ஆக்கிரமிப்பை அகற்றி கழிவுநீர் குளத்தில் விடுவது தவிர்க்க கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்” என வலியுறுத்தினார்.
இதுகுறித்து புதுச்சேரி வரலாறு ஆய்வாளர் அறிவன் கூறுகையில், “ஆயி மண்டபத்தின் பொருத்தவரை 4 பக்கங்களாக உருவாக்கப்பட்டுள்ளன. தெற்குப் பகுதியில் இருந்த ஆயின் சிலை முழுமையாக சிதிலமடைந்து விட்டது.
மக்களின் பார்வையில் இருந்து முழுமையாக விலகி விட்டது. இந்தோ பிரஞ்ச் உறவின் ஒரு முதன்மையான அடையாளமாகத் திகழும் இக்கட்டிடத்தினை தொடர்ந்து பராமரிப்பது அரசின் கடமை. புதுச்சேரியின் நிலத்தடி நீர் மட்டம் நீராதாரம் இப்போது மிகப் பெரிய கேள்விக் ஆகி வருகிறது.
அக்காலத்தில் நீருக்கு மதிப்பளித்தவர் ஆயி. மதிப்பளித்தவருக்கே ஆயிக்கு மண்டபத்தை அமைத்தது பிரான்ஸ் அரசு. இந்த வரலாற்று செய்திக்கு மதிப்பளித்து எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய மிகப்பெரிய கடமை அரசுக்கு உள்ளது. அதனால், இதை கருத்தில் கொண்டு மண்டபத்தை புதுப்பிக்க அரசு முன்வர வேண்டும்” என்றார்
இதையும் படிங்க...உயிர் பிச்சை அளித்த கடவுளுக்கும் நன்றி- 'திருப்பாச்சி' நடிகர்