புதுச்சேரியில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் மூன்று நாட்கள் நடைபெறும் புதுச்சேரி கலைவிழா, கடற்கரை காந்தி திடலில் தொடங்கியது. இதனை முதலமைச்சர் நாராயணசாமி, தலைமைச் செயலாளர் அசுவினி குமார் ஆகியோர் முரசு கொட்டி தொடங்கிவைத்தனர். பல்வேறு மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளை, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
நேற்று தொடங்கிய கலைவிழாவில் காஷ்மீர், மேகாலயா, ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களைச் சேர்ந்த 200 கலைஞர்களும், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 500 கலைஞர்களும் பங்கேற்று கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த கலைவிழா மனவெளி, கூடப்பாக்கம், கன்னியக்கோவில் உள்ளிட்ட ஐந்து இடங்களில் நடைபெறுகிறது.