புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கரோனா வைரஸ் பரவுதல் குறித்து அவரது அலுவலகத்தில் பதிவு செய்து வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “புதுச்சேரி மாஹேயில் மேலும் முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.
கரோனா தொற்றிலிருந்து மாஹே பகுதியில் ஒருவர் குணமடைந்த நிலையில் மேலும் தொற்று அறிகுறியுடன் 4 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
புதுச்சேரியில் கரோனா தொற்று தற்போது ஆறாக உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு சார்பில் அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் வழங்கப்படுகின்றன.
கரோனா வைரஸ் குறித்து பிரதமர் மாநிலத்தின் கருத்தைக் கேட்டுள்ளார். மத்திய அரசு 144 தடை உத்தரவை நீட்டித்தால் மக்களை காப்பாற்றும் வகையில் நாங்களும் இந்தத் தடையை நீட்டிப்போம்.
புதுச்சேரி மாநில எல்லைகளாக விழுப்புரம், கடலூர் பகுதிகளில் அதிகளவு வைரஸ் பரவுவதால், 144ஐ நீட்டிக்க வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளோம்.
மேலும் புதுச்சேரி மாநிலத்தில் அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டால் தமிழ்நாடு, கர்நாடக அரசுடன் பேசி அதற்கான ஏற்பாடுகளை செய்யவும் தயார் நிலையில் உள்ளோம்” இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படிங்க: ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியம் கரோனா நிதியாக வழங்கப்படும்- அமைச்சர்