ETV Bharat / bharat

ரயிலேறி தொழிலாளர்கள் உயிரிழந்த துயரம் - மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்! - காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்

டெல்லி : இடம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் மாநிலத்திற்குத் திரும்ப செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் மோசமாக வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

Policy of providing buses, trains to transport migrant workers poorly implemented: Chidambaram
ரயிலேறி தொழிலாளர்கள் உயிரிழந்த துயரம் - மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்!
author img

By

Published : May 8, 2020, 10:05 PM IST

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் நடந்த ரயிலேறி 17 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட அவர், “நமது நாட்டின் வளர்ச்சியின் தூதுவர்களான இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, இதுபோன்ற கடும் துயரமான நேரத்தில் இலவச ரயில் பயணத்தை ஏன் அளிக்க முடியவில்லை?

Policy of providing buses, trains to transport migrant workers poorly implemented: Chidambaram
ரயிலேறி தொழிலாளர்கள் உயிரிழந்த துயரம் - மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்!

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் நமது குடிமக்களுக்கு இலவச விமானப் பயணத்தை ஏற்பாடுசெய்து, அதன் பொறுப்பை அங்கீகரித்து, அதற்கான போக்குவரத்து, உணவுக்காக ரூபாய் 100 கோடி வரை செலவழித்த மத்திய அரசுக்கு, இதனை ஏன் செய்ய முடியவில்லை?இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமது சொந்த மாநிலத்திற்குத் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகள், ரயில்களை மோசமாக வடிவமைக்கப்பட்டு, மிக மோசமாக ஒருங்கிணைக்கப்பட்டு தவறாக செயல்படுத்தப்பட்டது.

மத்திய - மாநில அரசுகள் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்தத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்கின்றனர் என்பதை மறந்துவிட்டன. உணவு, உறைவிடம் என, எந்த அத்தியாவசியத்திற்கும் உத்தரவாதம் தராமல் அரசுகள் அறிவித்த ஊரடங்கே இதற்கு ஊற்றுக்கண் என, அரசுகள் இன்னும் உணரவில்லை.

  • It is obvious that the transport policy of providing buses and trains to transport migrant workers was poorly designed, planned, coordinated and implemented.

    — P. Chidambaram (@PChidambaram_IN) May 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும், தமது மாநிலங்களுக்குச் செல்லத் தொடங்கிய ஏழை எளிய மக்களுக்கு பயண உதவிகளை அரசாங்கம் வழங்கியிருக்க வேண்டும். இடம்பெயர்ந்தத் தொழிலாளர்களுக்குச் சரியான நேரத்தில் உதவியிருந்தால், இன்று காலை நடந்த சோகத்தைத் தவிர்த்திருக்கலாம்”என, தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : மகாராஷ்டிராவில், முதன்மைச் செயலாளருக்கு கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.