மேலும் அவர், முதியவர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான ஓய்வூதியம் முழுமையாக வழங்கப்படும் என்றார்.
அத்தியாவசிய பொருட்களை வாங்கச் செல்லும் மக்களை காவலர்கள் தடுப்பது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, காவலர்களுக்கு பொறுப்பேற்றுள்ள அதிகாரி ஊரடங்குக்கான விதிமுறைகள் காவலர்களுக்கு தெரிகிறதா என உறுதி செய்ய வேண்டும், இல்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மம்தா தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மம்தா, எங்களுக்கு யாரேனும் பொருள் உதவி செய்ய விரும்பினால், சுகாதரத் துறை அலுவலர் சஞ்சய் பன்சாலை தொடர்பு கொள்ளலாம் ( தொடர்பு எண் - 9051022000) என்றார்.
மேற்கு வங்க அரசாங்கத்தின் மாநில அவசர நிதிக்கு நன்கொடை அளிக்க விரும்புபவர்கள், வங்கிக் கணக்கு எண் 628005501339, IFSC: ICIC0006280 மற்றும் website: wb.gov.in ஆகியவற்றின் மூலம் செலுத்தலாம் என மம்தா தெரிவித்தார்.