நாள்தோறும் உயிரிழப்புகள், நோய் தொற்று பரவல் என செய்திகள் வெளியாகி வரும் இந்த இறுக்கமான கரோனா ஊரடங்கு காலத்தின் மத்தியில், மனதை இலகுவாக்கும் சில நிகழ்வுகளும் செய்திகளாக வெளிவருகின்றன.
அந்த வகையில் ஒடிசாவின் சுபர்ணாபூர் மாவட்டத்தில் உள்ள சுபாலயா காவல் நிலையத்தின் காவல் துணை ஆய்வாளர் தீப்தி ரஞ்சன் திகலும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஜோத்ஷ்நாரணி திகலும் நேற்று காவல் நிலையத்தில் காவல் துறை அலுவலர்களை சாட்சியாகக் கொண்டு திருமணம் செய்துள்ளனர்.

பிரம்மாண்டமான ஒரு திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்த இருவரும் ஊரடங்கின் காரணமாக எளிமையாக தங்கள் திருமணத்தை அதே நாளில் நடத்தி முடித்துள்ளனர்.
ஊரடங்கால் தீப்தி ரஞ்சன் தனது கிராமத்திற்கு திரும்ப முடியாததால், மணமகளின் குடும்பத்தினர் சுபாலய காவல் நிலையத்திற்கு வந்து, மூத்த காவல் அலுவலர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது.
எந்த ஆரவாரமுமின்றி தான் பணிபுரியும் இடத்திலேயே திருமணத்தை நடத்தி முடித்துள்ள தீப்திக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படிங்க: பிறந்தநாள் கேக்குக்கு முகக் கவசம் - கணவனை அசத்திய மனைவி!