தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் கோல்கொண்டா பகுதியில் வீட்டிலிருந்த வைஷ்ணவி என்ற ஐந்து வயது சிறுமியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடத்திச் சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர், லாங்கர் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து விசாரணையை தொடங்கிய காவல் துறையினர், சிறுமி கடத்தப்பட்ட இடத்தின் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த வைஷ்ணவியை, லுங்கி அணிந்த நபர் ஒருவர் அழைத்துச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியபோது, சிறுமியை கடத்திச் சென்ற கோடாங்கல்லைச் சேர்ந்த பகிரப்பா என்ற நபரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த சிறுமியை மீட்ட காவல் துறையினர், அவரது பெற்றோர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். இதனால் சிறுமியின் பெற்றோர் நிம்மதியடைந்தனர்..