திபெத் எல்லையில் 1959ஆம் ஆண்டு நடந்த சண்டையின்போது எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த 20 காவலர்கள் வீர மரணமடைந்தனர். பலர் காணாமல் போனார்கள்.
இந்தச் சம்பவத்தை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. புதுச்சேரி கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் காவலர் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு காவலர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து காவல்துறை தலைவர் பாலாஜி ஸ்ரீவத்ஸவா, காவல்துறை உயர் அலுவலர்கள், முப்படையைச் சேர்ந்த காவலர்கள் ஆகியோர் காவலர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் உயிர்நீத்த காவலர்களுக்கு 21 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க: காவலர் நினைவு தினம்: ஸ்டாலின் வீரவணக்கம்!