கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டத்தில், காதே பஜார் (Khade Bazar) காவல் நிலையம் உள்ளது. இங்கு உதவி காவல் ஆய்வாளராகப் பணிபுரியும் எம்.ஜி.கனாச்சாரி, தனது வீட்டிலிருந்து காவல் நிலையத்திற்கு மோட்டார் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
அப்போது, திடீரென்று சாலையில் நடுவே பாய்ந்த நாய் மீது, மோட்டார் இருசக்கர வாகனத்தை ஏற்றிவிடக்கூடாது எனத் திருப்பியுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கனாச்சாரியின் வாகனம் விபத்துக்குளானது. இந்த விபத்தில் உதவி காவல் ஆய்வாளர் கனாச்சாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: மதுரையில் பெண்ணின் தாலி செயின் பறிப்பு: கொள்ளையர்களுக்கு வலைவீச்சு