உலக நாடுகளில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் மகாத்மா காந்தியடிகளுக்கு அஞ்சல் தலைகளை வெளியிட்டு அவரை கௌரவப்படுத்தியுள்ளன. இந்நிலையில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் நேற்று முன்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனிடையே காந்தியை கௌரவிக்கும் வகையில் அவரது உருவப்படம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலையை போலந்து அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.
இந்த தகவலை அந்நாட்டு இந்திய தூதரகம் ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளது. இதேபோன்ற அஞ்சல் தலைகள் ஃபிரான்ஸ், உஸ்பெகிஸ்தான், துருக்கி, பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளும் மகாத்மா காந்திக்கு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஃபிரான்ஸ் அஞ்சல் தலையில் மகாத்மா காந்தி!