ETV Bharat / bharat

வங்கி நிதி மோசடி : விபுல் சிட்டாலியாவின் பிணை மனுவை நிராகரித்த நீதிமன்றம்!

author img

By

Published : Dec 5, 2020, 5:17 PM IST

மும்பை : பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடி வழக்கில் மத்திய புலனாய்வு பிரிவினால் கைதுசெய்யப்பட்ட கீதாஞ்சலி குழும நிறுவனங்களின் துணைத் தலைவர் விபுல் சிட்டாலியாவின் பிணை மனுவை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் நிராகரித்தது.

வங்கி நிதி மோசடி : விபுல் சிட்டாலியாவின் பிணை மனுவை நிராகரித்த நீதிமன்றம்!
வங்கி நிதி மோசடி : விபுல் சிட்டாலியாவின் பிணை மனுவை நிராகரித்த நீதிமன்றம்!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிகழ்ந்த நிதி மோசடி தொடர்பான வழக்கில் வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகிய இருவரும் ரூ 14,000 கோடி ரூபாய் அளவுக்கு நிதி மோசடி செய்துள்ளதாக சிபிஐ குறிப்பிட்டுள்ளது. மொத்தம் ரூ. 4,886 கோடி அளவுக்கு வங்கிகளில் 143 கடன் உத்திரவாத கடிதங்கள் (எல்.ஓ.யூ) , 224 வெளிநாட்டு கடன் ஒப்புதல் கடிதங்கள் மூலம் இந்த மோசடி நிகழ்ந்துள்ளதாக அறிய முடிகிறது.

இந்த மோசடியில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலரான உஷா அனந்த சுப்ரமணியன், பஞ்சாப் நேஷனல் வங்கியின் செயல் இயக்குநர்களான கே.வி. பிரம்மாஜி ராவ், சஞ்ஜீவ் சரண், பொது மேலாளர் நேகல் அகாத் உள்ளிட்ட பிரமுகர்கள் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

பிரதான குற்றவாளியாக சிபிஐ குறிப்பிட்டுள்ள மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி குழுமத்தின் துணைத் தலைவராக இருந்துவந்த விபுல் சிட்டாலியாவை கடந்த 2018 மார்ச் மாதம் மத்திய புலனாய்வுப் பிரிவு கைதுசெய்தது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விபுல் சிட்டாலியா, பிணை கோரி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

கீதாஞ்சலி குழுமத்தின் துணைத் தலைவர் விபுல் சிட்டாலியாவின் பிணை மனுவை நிராகரித்த நீதிமன்றம்!

இந்த மனுவானது, சிறப்பு சிபிஐ நீதிபதி வி.சி.பார்டே தலைமையிலான அமர்வின் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிகழ்ந்த நிதி மோசடியில் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கீதாஞ்சலி குழும நிறுவனங்களின் துணைத் தலைவர் விபுல் சிட்டாலியா பிணை மனுவை நிராகரிப்பதாக தெரிவித்தது.

இதையும் படிங்க : ஏழை மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் முன்னாள் பிரதமர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.