ETV Bharat / bharat

'அனைவரும் ஒத்துழைப்போம், கரோனாவை விரட்டுவோம்'- அமித் ஷா - மக்கள் ஊரடங்கு, ஜனதா ஊரடங்கு, நரேந்திர மோடி, அமித் ஷா

டெல்லி: நாளை (மார்ச்22) பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் ஊடரங்கு அறிவித்துள்ள நிலையில் இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.

COVID-19  Coronavirus outbreak  Amit Shah  Janta Curfew  'அனைவரும் ஒத்துழைப்போம், கரோனாவை விரட்டுவோம்'- அமித் ஷா  மக்கள் ஊரடங்கு, ஜனதா ஊரடங்கு, நரேந்திர மோடி, அமித் ஷா  PM's call for 'Janta' curfew need of the hour: Amit Shah

author img

By

Published : Mar 21, 2020, 11:58 PM IST

உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்கள் ஊரடங்கு குறித்து தொடர்ச்சியான ட்வீட்கள் வெளியிட்டுள்ளார். அதில் மக்கள் ஊரடங்கு நடவடிக்கைக்கு மக்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர், தொற்றுநோய்களுக்கு மத்தியில் நாட்டைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க மக்கள் ஓரிடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், “ இந்தியா கரோனாவை எதிர்த்துப் போராடுவதால், கோவிட் -19ஐ தோற்கடிப்பதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். மார்ச் 22 அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டுக்குள்ளேயே இருங்கள். உங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் ஊக்குவிக்கவும். இது நமது இயக்கம், நாட்டை ஒன்றாக வெல்வோம்” என்று கூறியிருந்தார்.

மற்றொரு ட்வீட்டில், “நாட்டைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க தொடர்ந்து பணியாற்றி வரும் மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கைதட்டி ஆதரவையும் நன்றியையும் தெரிவிக்க யாரும் மறந்துவிடக்கூடாது.

  • Prime Minister @narendramodi ji’s appeal for a Janta Curfew is need of the hour.

    As #IndiaFightsCorona, let us do our bit to defeat COVID-19.

    Stay indoors on 22 March from 7am to 9pm. Encourage your friends and relatives too. This is our movement, we will win, together! pic.twitter.com/ndGjiPlXk0

    — Amit Shah (@AmitShah) March 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

உங்கள் குடும்பத்தினருடன் வெளியே வந்து அல்லது மாடியில் நின்று மருத்துவர் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் கைதட்டல் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” என்றார்.

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மார்ச் 22ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அதிர்ச்சி: வெளிநாடு செல்லாத இந்தியப் பெண்ணுக்கு கரோனா தொற்று!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.