ETV Bharat / bharat

தீவிரமடையும் ஆம்பன் புயல்: மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் - ஆம்பன் புயல் பாதிப்பு

டெல்லி: ஆம்பன் புயல் வலுப்பெற்றுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக உள் துறை, தேசிய பேரிடர் மேலாண்மை உயர் அலுவலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.

PM
PM
author img

By

Published : May 18, 2020, 2:44 PM IST

வங்கக்கடலில் உருவாகியுள்ள ’ஆம்பன் புயல்’ அதிதீவிரப் புயலாக உருவெடுத்துள்ளதால் மேற்குவங்கம், ஒடிசாவுக்கு புயல் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

தீவிரப் புயலான ஆம்பன், வங்கக்கடலின் தென்கிழக்குப் பகுதியிலிருந்து, வடக்கு - வடகிழக்கு நோக்கி நகர்ந்து 13 கி.மீ. வேகத்தில் சென்றுவருகிறது. இது மேலும் தீவிரமடைந்து, அதி தீவிரப்புயலாக உருவெடுக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து அதிதீவிரப் புயலாக மாறும் ஆம்பன், மேற்குவங்கம் - வங்கதேசம் கடற்கரைகளில் மே 20ஆம் தேதி பிற்பகல் அல்லது மாலை நேரங்களில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும், மேற்கு வங்கம், வங்கதேசம் கடற்கரைகளை மிகக் கடுமையாகத் தாக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

155 கி.மீ. முதல் 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் அதிகபட்சமாக 185 கி.மீ. வரை காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று மாலை நான்கு மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.

  • To review the arising cyclone situation in various parts of the country, PM @narendramodi ji will chair a high level meeting with MHA & NDMA, today at 4pm.

    — Amit Shah (@AmitShah) May 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதில் உள் துறை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையகத்தின் உயர் அலுவலர்கள் பங்கேற்பார்கள் என உள் துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மேற்கு வங்கத்தை நோக்கி அதிதீவிர புயலாக மாறும் ஆம்பன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.