சுவாமி விவேகானந்தர் 1896ஆம் ஆண்டு 'பிரபுத்தா பாரத்' என்ற மாத இதழைத் தொடங்கினார். இதன் 125ஆவது தொடக்கவிழா ஜனவரி 31ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில், பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். உத்தரகாண்ட் மாயவதியில் உள்ள அத்வைத ஆசிரமம் சார்பில் இந்நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
கடந்த 1896ஆம் ஆண்டு, 'பிரபுத்தா பாரத்' என்ற மாத இதழ் முதன்முதலில் சென்னையில் தொடங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அல்மோராவிலிருந்து வெளியிப்பட்டது. 1899ஆம் ஆண்டு முதல் அத்வைத ஆசிரமத்திலிருந்து வெளியிடப்பட்டுவருகிறது.
நேதாஜி, திலகர், அரவிந்தர், முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்திய கலாசாரம், ஆன்மிகம், வரலாறு, கலை, சமூகப் பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து அந்த இதழில் எழுதியுள்ளனர்.