நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளைச் செடி கொடிகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 2ஆம் தேதி சர்வதேச பூமி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச பூமி தினம் குறித்து பல ஆண்டுகளுக்கு முன் குஜராத்தி மொழியில் எழுதிய ஒரு கவிதையை கிஷோர் மக்வானா என்ற எழுத்தாளர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த கவிதை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது.
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது கவிதையைப் பகிர்ந்ததற்கு கிஷோர் மக்வானாவுக்கு மோடி நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "உலகின் மகத்துவத்தையும் அழகையும் விவரிக்கும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன் நான் இந்த கவிதையை எழுதினேன். பூமி நாளில் இந்த கவிதையை நினைவில் வைத்ததற்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இஸ்லாமியரிடமிருந்து பொருள் வாங்க மறுத்தவர் கைது!