கொல்கத்தா துறைமுகம், ஹவுரா பாலத்தின் 150ஆவது ஆண்டு விழா, விவேகாந்தர் 157ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்கம் தலைவர் கொல்கத்தா சென்றுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக, கொல்கத்தா மில்லினியம் பூங்காவில் நேற்று இரவு நடைபெற்ற கொல்கத்தா துறைமுகம், ஹவுரா பாலத்தின் 150ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட பிரதமர், படகு மூலம் ராமகிருஷ்ணா மடத்தின் சர்வதேச தலைமையகமான பெலூர் மடத்துக்கு சென்றார்.
இதையடுத்து, இன்று காலை மடத்தில் உள்ள ராமகிருஷ்ண பிரமஹம்சாவின் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மாலை அணிவித்து மரியதை செலுத்தினார். தொடர்ந்து மடத்தின் ஜீயர்கள், குருக்களுடன் சேர்ந்த பிராத்தனையில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க : ஹவுரா பாலத்தை ஒளிரூட்டிய மோடி!