டெல்லியில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச நீதித்துறை மாநாட்டை பிரதமர் மோடி காலை 10 மணிக்குத் திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து கேலோ இந்தியா பல்கலைக்கழகத்தின் விளையாட்டுப் போட்டியை காணொலி மூலம் தொடங்கி வைக்க உள்ளார். பின் தொடக்க விழாவில், வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம் பிரதமர் உரையாற்றுவார்.
முதலாவது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப்போட்டிகள், ஒடிசா மாநிலத்தில் உள்ள புபனேஸ்வர் மற்றும் கட்டாக்கில் இன்று தொடங்கி வரும் மார்ச் 1ஆம் வரை நடைபெற உள்ளன.
இதில் வில் அம்பு, தடகளம், குத்துச்சண்டை, வாள் வீச்சு, நீச்சல், ஜூடோ, பளு தூக்குதல், மல்யுத்தம், கூடைப்பந்து, வலைப்பந்து, டேபிள் டென்னிஸ், ரக்பி, டென்னிஸ், கபடி உள்பட 17 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன.
நாடு முழுவதும் இருந்து 200 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர்.
இதையும் படிங்க: அதிபர் ட்ரம்ப்பின் இந்திய பயணம் - இரு நாடுகளிடையேயான நீடித்த உறவை உணர்த்துகிறது - வெள்ளை மாளிகை