ETV Bharat / bharat

சுந்தர் பிச்சை - மோடி வீடியோ கான்பரன்ஸ் - காரணம் இதுதான்! - சுந்தர் பிச்சை

டெல்லி: கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சையுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாகவும், இந்த உரையாடல் பலன் தரும் எனவும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
author img

By

Published : Jul 13, 2020, 3:40 PM IST

'கூகுள் ஃபார் இந்தியா' என்ற நிகழ்வின் ஆறாவது ஆண்டு விழா இன்று நடைபெறவுள்ளது. டிஜிட்டல்மயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளித்துவரும் இந்தியாவில் புதிய வாய்ப்புகளை உருவாக்கித்தரும் நோக்கில் இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது. கரோனா பெருந்தொற்று காரணமாக முதல்முறையாக வீடியோ கான்பரன்சிங் மூலம் இது நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, ஆல்பபெட் மற்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினார்.

பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாகவும், இந்த உரையாடல் பலன் தரும் எனவும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று காலை, சுந்தர் பிச்சையுடன் பலன் தரும் விதமான உரையாடலை மேற்கொண்டேன். இந்திய விவசாயிகள், இளைஞர்கள், தொழில் முனைவோர் ஆகியோரின் வாழ்க்கையை தொழில்நுட்பத்தின் உதவியோடு மாற்றியமைப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினோம்.

  • I was delighted to know more about the efforts of @Google in several sectors, be it in education, learning, @_DigitalIndia, furthering digital payments and more. @sundarpichai

    — Narendra Modi (@narendramodi) July 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கரோனா மூலம் ஏற்பட்ட புதிய பணி கலாசாரம் குறித்து உரையாடினோம். பெருந்தொற்றால் விளையாட்டுத்துறை உள்ளிட்டவை சந்தித்த சவால்கள், தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு ஆகியவை குறித்து ஆலோசித்தோம். கல்வி, டிஜிட்டல் இந்தியா, இணைய பண பரிமாற்றம் ஆகியவற்றை மேம்படுத்த கூகுள் நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து அறிந்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்" என பதிவிட்டுள்ளார்.

சுந்தர் பிச்சை, தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஆகியோர் இன்று நடைபெறவுள்ள 'கூகுள் ஃபார் இந்தியா' நிகழ்வில் உரையாற்றவுள்ளனர்.

  • This morning, had an extremely fruitful interaction with @sundarpichai. We spoke on a wide range of subjects, particularly leveraging the power of technology to transform the lives of India’s farmers, youngsters and entrepreneurs. pic.twitter.com/IS9W24zZxs

இதையும் படிங்க: இந்தியாவுடனான வர்த்தகம் - அமெரிக்கா முதல் இடம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.