ETV Bharat / bharat

சீன விவகாரங்க... பேசுறப்ப கவனமா இருக்கணும் - மோடிக்கு மன்மோகன் அறிவுரை - Former PM

டெல்லி:  சீனா உடனான எல்லை விவகாரங்கள் குறித்து பேசும்போது பயன்படுத்தும் சொற்களில் கவனம்கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு, மன்மோகன்சிங் அறிவுறுத்தியுள்ளார்.

pm-must-be-mindful-of-implications-of-his-words-manmohan-on-ladakh-standoff

author img

By

Published : Jun 22, 2020, 5:32 PM IST

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சீன ராணுவத்தினரின் அத்துமீறல் குறித்தும், எல்லை விவகாரங்கள் குறித்தும் முன்னாள் பிரதமரும், மாநிலங்களவை உறுப்பினருமான மன்மோகன் சிங் கருத்து தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், "கடந்த 15ஆம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், நமது வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அவர்கள் இறக்கும் தருவாயிலும் நாட்டிற்காகப் போராடினர். அவர்களது தியாகத்தைக் கருத்தில்கொண்டு ஜனநாயக முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியத்தில் தற்போது பிரதமர் உள்ளார்.

சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அடிபணிந்திடக்கூடாது. இந்திய இறையாண்மையை சமரசம் செய்துகொள்ளும் எவ்வித நடவடிக்கையிலும் அரசு ஈடுபட்டுவிடக் கூடாது. சீனா தங்களது நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தும்விதமாக பிரதமர் எவ்வித சொற்களையும் பயன்படுத்திவிடக் கூடாது. எல்லை விவகாரங்கள் குறித்து பேசும்போது பிரதமர் பதவியில் இருப்பவர்கள் உபயோகப்படுத்தும் சொற்களில் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும்.

பதற்றமான சூழ்நிலையில் எல்லைப் பகுதிகளில் நிலவும் சூழல் குறித்து தவறான தகவல்களை மக்களுக்கு வழங்குவதால் ஒருபோதும் உண்மையை மறைத்துவிட முடியாது. இது அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு எதிரான செயலாக மாறிவிடும். இது மக்களுக்கு செய்யப்படும் வரலாற்றுத் துரோகமாகக் கருதப்படும்.

தற்போது எடுக்கப்படும் முடிவுகள், அரசின் செயல்கள் வருங்காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.

pm-must-be-mindful-of-implications-of-his-words-manmohan-on-ladakh-standoff
மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கை

இத்தகைய சூழலில் பிரதமர் அலுவலகத்திலுள்ள அனைத்துத் துறைகளும் ஒன்றிணைந்து செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.