பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவியேற்றுள்ளார். ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த இவருக்கு உலக நாட்டு தலைவர்கள் வாழ்த்துக்கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக் கூறியுள்ளார்.
அதில், " பிரிட்டன் பிரதமராக பதவியேற்றுள்ள போரிஸ் ஜான்சனுக்கு என்னுடையே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா - பிரிட்டன் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதில், தங்களுடன் இணைந்து செல்பட காத்திருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.