ETV Bharat / bharat

நாடு முழுவதும் ஹோலி கொண்டாட்டம்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து - Narendra Modi

டெல்லி: நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு உள்ளிட்ட பலர் தங்கள் வாழ்த்துசெய்தியை பகிர்ந்துகொண்டனர்.

Holi
Holi
author img

By

Published : Mar 10, 2020, 10:23 AM IST

நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை இன்று விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து நாட்டு மக்களுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் ஆகியோர் தங்கள் வாழ்த்து செய்தியைப் பகிர்ந்துவருகின்றனர்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'வண்ணங்கள், மகிழ்ச்சியை கொண்டுவரும் ஹோலிப் பண்டிகையில் நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துசெய்தியை பகிர்ந்துகொள்கிறேன். இந்த ஹோலிப் பண்டிகை மக்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டுவர பிரார்த்திக்கிறேன்' எனத் குறிப்பிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துசெய்தியில், சமூகத்தில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் விதமாக ஹோலி பண்டிகை மகிழ்ச்சியை தரட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, நாட்டு மக்களுக்கு வளம், வளர்ச்சி, அமைதி, நாட்டின் பிரிவினைகளை களைந்து ஒற்றுமையை உறுதிபடுத்தட்டும் என தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், மகிழ்ச்சியை தரும் வண்ணங்களின் பண்டிகையான ஹோலி பண்டிகையைக் கொண்டாடும் நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கச்சா எண்ணெய் விலை சரிவால் இந்தியாவில் அதன் மீதான நிலை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.