17ஆவது மக்களவையை தேர்ந்தெடுக்க ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது.
இதையடுத்து, இரண்டவாது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், 2ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் முதல் முறையாக தமிழகம் வருகிறார் மோடி.
இம்மாதம் 3ஆவது வாரம் நடைபெற உள்ள சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். இதற்கு முன், மக்களவை தேர்தல் பரப்புரைக்காக தமிழ்நாடு வந்தது குறிப்பிடத்தக்கது.
அப்போது, கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடதத் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.