ரேடியோ ஜாக்கிகள் ( வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்) இந்திய குடும்பங்களின் உறுப்பினர்கள் ஆவர். மக்கள் அவர்கள் பேசுவதை கேட்பதோடு நின்றுவிடுவதில்லை, அவர்களை பின்பற்றவும் செய்கின்றனர். எனவே அவர்கள் பொறுப்பை உணர்ந்து மக்களை ஊக்குவிக்க வேண்டும் என ரேடியோ ஜாக்கிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் மோடி கேட்டுக்கொண்டார்.
மருத்துவ நிபுணர்கள், அரசாங்க நடவடிக்கைகள் குறித்த தகவல்களை தெரிவிப்பதோடு, மக்கள் சந்திக்கும் சிக்கல்கள் குறித்து கருத்து தெரிவித்தால் அதை சரிசெய்ய வசதியாக இருக்கும் என மோடி தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘மன் கி பாட்’ நிகழ்ச்சியின் மூலம் ஆர்ஜேக்களுடன் சகோதரத்துவ உறவை மோடி பேணிவருகிறார். இந்தக் கலந்துரையாடலில் மோடியின் திடீர் ஊரடங்குக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பு குறித்து ஆர்ஜேக்கள் சுட்டிக்காட்டினர்.
இதில் தொடர்ந்து பேசிய மோடி, 130 கோடி மக்களும் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தன்னார்வத்துடன் பங்கேற்க வேண்டும். வதந்திகளை தடுப்பதில் அனைத்து இந்திய வானொலி ஒளிபரப்பாளரின் பங்களிப்பு அவசியம். ஆர்ஜேக்களும் வதந்திகளை தடுக்கும் முயற்சியினை மேற்கொள்ள வேண்டும் என மோடி கேட்டுக்கொண்டார்.