நாட்டின் 71ஆவது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக குடியரசு தினத்தன்று பிரதமர் தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளார். நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவ வீரர்களை நினைவுகூரும்வகையில் தேசிய போர் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ராஜ்பாத்திற்கு (ராஜபாதை) சென்ற பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரை வரவேற்றார்.
தற்போது, ராணுவ வீரர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்டு முப்படை வீரர்களின் சாகசங்கள் கொண்ட ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியை பிரதமர் மோடி கண்டு களித்துவருகிறார். இந்நிகழ்வில் முப்படை தளபதி பிபின் ராவத், ராணுவத் தலைமை தளபதி நரவணே, கப்பல்படை தலைமைத் தளபதி கரம்பீர் சிங், விமானப்படைத் தளபதி ராகேஷ் குமார்சிங் பதோரியா உள்ளிட்ட பாதுகாப்புப் படை உயர்மட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: இறந்தவர்களுக்கான பத்ம விருதுகள் 2020 அறிவிப்பு