அஸ்ஸாம் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு பல்வேறு முக்கிய திட்டங்களை இன்று தொடங்கிவைக்கிறார். இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில், " மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 'அசாம் மாலா' என்ற திட்டத்தை தொடங்கிவைக்க உள்ளேன். அஸ்ஸாமின் பொருளாதார வளர்ச்சிக்கும் இணைப்புக்கும் இது பெரிய பங்காற்றும்.
பிஸ்வநாத், சரைடியோ ஆகிய இடங்களில் மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இது அஸ்ஸாம் மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தும். கடந்த சில ஆண்டுகளில், சுகாதாரத்தில் அஸ்ஸாம் பெரிய அளவில் முன்னேற்றத்தை கண்டுள்ளது. மாநிலத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியத்திற்கும் பயனளிக்கும் விதமாக உள்ளது" என பதிவிட்டுள்ளார்.
அசாம் மாலா திட்டம் குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "களத்தில் இறங்கி தகவல்களை சேகரிப்பதால் பராமரிப்பு பணிகளுக்கு தனித்துவமான இத்திட்டம் பெரிய அளவில் பயன்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
1,110 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு மருத்துவமனைகள் கட்டப்பட உள்ளது. 500 படுக்கை வசதிகள், 100 கல்லூரி சீட்டுகளுடன் இக்கல்லூரி அமையவுள்ளது.