டெல்லியின் சதரா-தீஸ் ஹசரே ரயில் நிலையங்களுக்கு இடையே 2002ஆம் ஆண்டு டெல்லி மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.
டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கி 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், டெல்லி சாணக்கியபுரி- பொட்டானிக்கல் கார்டன் இடையே உள்ள வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் இன்று (டிச.28) முதல் இயக்கப்படவுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்தகட்டமாக, முற்றிலும் தானியங்கி தொழில்நுட்ப வசதியுடன், ஓட்டுநர் இல்லாமல் கட்டுப்பாட்டு அறை மூலம் இந்த மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது. டெல்லி மெட்ரோ ரயில் சேவையின் மெஜந்தா வழித்தடத்தில் இந்தப் புதிய முயற்சி நடைமுறைக்கு வருகிறது.
இந்நிலையில், நாட்டின் முதல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று கொடி அசைத்து தொடங்கிவைக்கிறார்.
மேலும், தேசிய பொது பயண அட்டையையும் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தி வைக்கிறார். டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் பிரத்யேகமாக இந்த அட்டையை உருவாக்கியுள்ளது.
இந்த அட்டை மூலம் பேருந்து பயண கட்டணம், வாகன நிறுத்துமிட கட்டணம், சில்லரை வர்த்தகம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளலாம். இந்த அட்டை மூலம் ஏடிஎம்களில் பணம்கூட எடுத்துக் கொள்ள முடியும்.
இதையும் படிங்க: 2020 - இந்தியா ஒரு பார்வை