இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இணைந்து பங்கேற்கும் சர்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார். RAISE 2020 என்ற பெயரில் நடைபெறும் இந்த இணைய வழி மாநாட்டில் சுகாதாரம், கல்வி, வேளாண்மை ஆகிய துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பங்களிப்பு, மேம்பாடு ஆகியவை குறித்து விவாதிக்கப்படும்.
இந்நிகழ்வை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்து சிறப்புரையாற்றவுள்ளார். இதில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அலுவலர் அமிதாப் கந்த், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ஐ.பி.எம் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் அரவிந்த் கிருஷ்ணா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
சுமார் 125 நாடுகளிலிருந்து 38 ஆயிரத்து 700 பங்கேற்பாளர்கள் இந்த மாநாட்டிற்காக பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: வட்டி மீதான வட்டி தள்ளுபடி - பெரும் கடனாளர்களுக்கு மட்டுமே நிவாரணம்!