பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டை வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி வரும் 19ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார். கரோனாவுக்கு பிறகான உலகத்தில் சந்திக்கவுள்ள சவால்கள் குறித்தும் தகவல் மற்றும் தொழில்நுட்பம், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை குறித்தும் அவர் உரையாற்றவுள்ளார்.
நவம்பர் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதிவரை நடைபெறவுள்ள இந்த உச்சி மாநாட்டை கர்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த உச்சி மாநாட்டில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், சுவிஸ் கூட்டமைப்பின் துணை தலைவர் கை பார்மலின் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.