'லோக் நாயக்' என்று அழைக்கப்படும் ஜெயபிரகாஷ் நாராயணின் 118 பிறந்த நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதில் அவர், இந்தியாவின் சுதந்திரத்திற்கு உறுதியுடன் போராடி ஜனநாயகத்திற்கு ஆபத்து வந்தபோது மக்கள் இயக்கத்தின் மூலம் அதை பாதுகாத்த ஜே.பிக்கு நான் தலை வணங்குகிறேன்.
தேச நலன், மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டிருந்த ஜே.பி. தன் வாழ்நாள் முழுவதும் அதற்காகவே தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் எனத் தெரிவித்துள்ளார்.
அவசர நிலை காலத்தில் மக்கள் இயக்கம் மூலம் அன்றைய காங்கிரஸ் அரசை வீழ்த்தி, இந்தியாவில் காங்கிரஸ் இல்லாத முதல் மத்திய அரசை உருவாக்கியவர் ஜெயபிரகாஷ் நாராயணன். 1999ஆம் ஆண்டு அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
ஜே.பியின் தொண்டராகக் கருதப்படும் நானாஜி தேஷ்முக்குக்கும் இன்று பிறந்தநாள் என்பதால் அவருக்கும் தனது நினைவஞ்சலியை மோடி செலுத்தியுள்ளர்.
இதையும் படிங்க: இந்தியாவில் 70 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு