73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி உரையாற்றிவருகிறார். அவரது உரையின் சில...
- நாட்டு மக்களுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்.
- குழந்தைகள் நலனுக்காகவும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகவும் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
- அரசியல் ஆதாயத்திற்காக முத்தலாக் தடைச் சட்டத்தை கொண்டு வரவில்லை. முத்தலாக் தடைச் சட்டம் பெண்களின் முன்னேற்பாட்டிற்கு வழிவகுக்கும். இச்சட்டத்தை இஸ்லாமிய பெண்கள் கொண்டாடிவருகின்றனர்.
- காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நாட்டின் வளர்ச்சி கேள்விக்குறியாக இருந்தது.
- நாட்டில் மாற்றம் ஏற்படுமா? என்று மக்கள் நினைத்தார்கள். அதை நான் மாற்றிக் காட்டினேன்.
- 2019 தேர்தலில் பேட்டியிட்டது மோடி அல்ல... இந்திய மக்கள்தான்!
- அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிறந்த இந்தியாவை உருவாக்க நாம் பணியாற்ற வேண்டும். சிறந்த இந்தியாவை உருவாக்க நான் அயராது உழைத்துவருகிறேன். 130 கோடி மக்களும் அதற்கான வல்லமையை எனக்குக் கொடுத்துள்ளனர்.
- நெருக்கடி நேரங்களில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
- சிறப்புத் தகுதி ரத்து செய்து வல்லபாய் படேலின் கனவை நனவாக்கியுள்ளோம். காஷ்மீர் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றியுள்ளோம்.
- விவசாயிகள் கடன் பெறுவதை உறுதி செய்துள்ளோம்.
- சுகாதாரத் திட்டத்தில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
- 370ஆவது சட்டப்பிரிவு நீக்கம், ஜம்மு-காஷ்மீர் அனைத்து தரப்பு மக்களுக்கும் பலனைத் தரும்.
- மக்கள் அளித்த பணியை, பிரதமர் என்ற முறையில் சிறப்பாக நிறைவேற்றிவருகிறேன்.
- எனது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படவில்லை. நாட்டின் எதிர்காலத்தையே முக்கியமாகக் கருதுகிறேன்.
- ஒரு நாடு; ஒரு தேர்தல் பற்றி அனைவரும் கண்டிப்பாக விவாதிக்க வேண்டும்.
- வறுமையை ஒழித்துவிட்டால், அரசின் உதவிகளை மக்கள் எதிர்பார்க்கும் தேவை இருக்காது.
- 'நீரின்றி அமையாது உலகு...' என்று மகான் வள்ளுவர் அன்றே சொன்னார் என்பதையும் மோடி சுட்டிக்காட்டி நீரின் முக்கியத்துவம் பற்றி தனது உரையில் குறிப்பிட்டார்.