ETV Bharat / bharat

'புதிய கேபிள் திட்டம் அந்தமானின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்' - பிரதமர் மோடி நம்பிக்கை

டெல்லி: சென்னை-அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு இடையிலான கண்ணாடி ஒளியிழை கேபிள் திட்டம் அத்தீவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Modi
Modi
author img

By

Published : Aug 10, 2020, 4:30 PM IST

சென்னை-அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இடையே நீர்மூழ்கி கண்ணாடி ஒளியிழை கேபிள் இணைப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 10) தொடங்கிவைத்தார். அதன்பின் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”அந்தமான் மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த இந்தத் திட்டம் நிறைவேறியுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.

இதன் மூலம் அப்பகுதியில் அதிவேக இணைய வசதி உறுதி செய்யப்படும். மேலும், தொலைத்தொடர்பு வசதிகள் மேம்பட்டு, அங்குள்ள பொருளாதாரம் சிறப்பான முன்னேற்றத்தை அடையும். இணையவழிக் கல்வி, மருத்துவம், நிர்வாகம் உள்ளிட்ட முன்னேற்ற பாதைக்கு இந்தக் கேபிள் திட்டம் அழைத்துச் செல்லும்” என்றார்.

இத்திட்டத்திற்கான தொடக்கவிழா 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், ஒன்றரை வருடக் காலத்தில் நிறைவடைந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் சென்னையிலிருந்து போர்ட் பிளேர் மற்றும் ஸ்வராஜ் டீப் (ஹேவ்லாக்), லாங் ஐலேண்ட், ரங்காட், ஹட்பே (லிட்டில் அந்தமான்), கமோர்டா, கார் நிக்கோபார் மற்றும் காம்பெல் பே (கிரேட் நிக்கோபார்) ஆகிய ஏழு தீவுகளுக்கு சிறந்த தகவல் இணைப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 'நாட்டை கொள்ளையடிப்பதுதான் EIA 2020 வரைவின் தெளிவான நோக்கம்' - ராகுல் தாக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.