ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.28 மணிக்கு பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலமாக கார்டோசாட் 3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைக்கோள்களும் அடங்கும்.
இந்தச் சாதனையை நிகழ்த்திய இஸ்ரோ குழுவினருக்கு பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ' பிஎஸ்எல்வி சி - 47 ராக்கெட் மூலம் கார்டோசாட் - 3 மற்றும் அமெரிக்காவிற்குச் சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய, இஸ்ரோ குழுவினருக்கு வாழ்த்துகள். மீண்டும் உலக அரங்கில் நமது நாட்டை நீங்கள் தலைநிமிர செய்துள்ளீர்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
![பிரதமர் ட்விட்டர் பதிவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5190275_thu.jpg)
இதையும் படிங்க:வெங்காயத்திற்கு போட்டியான முருங்கை: ஒரு கிலோ ரூ.260க்கு விற்பனை