உலகின் மிகப்பெரிய ஐனநாயக திருவிழாவாக கருதப்படும் இந்திய மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி 353 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்க ஆயுத்தமாகியுள்ளது. இந்நிலையில, இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக கூட்டணியில் வெற்றிபெற்ற எம்பிக்களின் கூட்டம் நடைபெற்றது.
இதில், மோடி, அமித் ஷா, அத்வாணி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாஜக நாடாளுமன்றக் குழு தலைவராக மோடி ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்நது, உரை நிகழ்த்த வந்த மோடி, அங்கு வைக்கப்பட்டிருந்த இந்திய அரசியலமைப்பு புத்தகத்திற்கு தலை வணங்கினார். மோடியின் இந்த செயல் நாடாளுமன்ற வளாகத்தில் கூடியிருந்தவர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
2014 ஆம் ஆண்டு முதல் முறை நாடாளுமன்றத்திற்கு வந்த மோடி, ஐனநாயகம் என்ற கோயிலுக்கு மரியாதை செல்லும் விதமாக நுழைவாயில் முன் மண்டியிட்டு வணங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.