ETV Bharat / bharat

மு.க.ஸ்டாலின்- பிரதமர் போனில் உரையாடல்! - மு.க. ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் டெலிபோனில் தொடர்புக் கொண்டு பேசியுள்ளனர்.

PM Modi, Amit Shah talk to Stalin over phone  talk to Stalin over phone  PM Modi, Amit Shah talk to Stalin  மு.க. ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேச்சு  கோவிட்19 பரவல், அனைத்துக் கட்சி கூட்டம்

author img

By

Published : Apr 5, 2020, 7:26 PM IST

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் டெலிபோனில் தொடர்புக் கொண்டு பேசியுள்ளனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது தாயார் தயாளு அம்மா மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

நாட்டில் கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, வருகிற 8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்குமாறு அப்போது அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அழைப்பை ஏற்று திமுக சார்பில் டி.ஆர். பாலு கூட்டத்தில் பங்கேற்கிறார். இது தொடர்பாக கட்சி செய்திக் குறிப்பில், “நாட்டின் நிலைமையை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'அப்போ கைத்தட்டல், இப்போ அகல் விளக்கு'- காங்கிரஸ் அதிருப்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.