டெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களின் பல ஆண்டுகள் கோரிக்கையாக கருதப்பட்டது டெல்லியில் அவர்கள் தங்குவதற்கான குடியிருப்பு.
இவர்களது கோரிக்கை பல்வேறு ஆண்டுகளாகவே கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு குடியிருப்புப் பணிகளை தொடங்கியது.
இந்தப் பணிகள் முற்றிலும் முடிவடைந்ததையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் பயன்பாட்டிற்காக இந்தக் கட்டடத்தை திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அவர், "பல ஆண்டு காலங்களாக தொடர்ந்த இந்தக் கோரிக்கையை தவிர்க்காமல் அவர்களது கோரிக்கை முழுவதுமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாஜக தலைமையிலான அரசு பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு கட்டடங்களையும், கனவு திட்டங்களையும் உருவாக்கியுள்ளது. அடல் சுரங்கம், அம்பேத்கர் தேசிய நினைவகம் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் பல கட்டடங்கள் செயல்பாட்டில் உள்ளன.
மும்பை நுழைவாயில் அருகே போர் நினைவு அமைப்பதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது. இது ராணுவ வீரர்களுக்கு மட்டுமின்றி, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு உயிர் நீத்த ஆயிரம் ஆயிரம் காவலர்களை பெருமைப்படுத்தும்" என்றார்.
இதையும் படிங்க: பெருந்தொற்று காலத்திலும் தொழில்முனைவோருக்கு வாய்ப்பு பெருகியுள்ளது - பிரதமர் மோடி