நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உறவினரான பேராசிரியர் சித்ரா கோஷ் நேற்றிரவு (ஜன. 07) காலமானார். 90 வயதான சித்ரா கோஷ், நேதாஜி சகோதரர் சரத் சந்திரபோஸின் இளைய மகள் ஆவார்.
இந்நிலையில் சித்ரா கோஷிற்கு அஞ்சலி செலுத்தி பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார். அதில், "பேராசிரியர் சித்ரா கோஷ், சமூக சேவையிலும், கல்வித் துறையிலும் தனது சேவையை செய்துள்ளார்.
நான் அவரைச் சந்தித்தபோது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான ஆவணங்கள் உள்பட பல தலைப்புகளில் நாங்கள் தீவிர விவாதம் நடத்தினோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...கரோனா தடுப்பு ஒத்திகை - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு!