கரோனா வைரசை எதிர்கொள்ள நாட்டு மக்கள் அரசின் நிவாரண நிதிக்கு பணமளித்து வருகின்றனர். அதில், 99 வயதாகும் குஜராத் மாநிலத்தின் முன்னாள் எம்எல்ஏ ரத்னபாய் தம்மர் தனது சேமிப்பு பணம் ரூ. 51 ஆயிரத்தை வழங்கினார். இந்த சம்பவம் நாட்டு மக்கள் அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி ரத்னபாய் தம்மரை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது ரத்னபாய் தம்மரின் உடல்நிலையை பற்றி மோடி விசாரித்ததாகவும், இந்த சூழலிலும் நாட்டு மக்களின் நலனுக்காக சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து ரத்னபாய் தம்மர் பேசுகையில், ''நான் எனது சேமிப்பு பணத்தை நாட்டுக்கு வழங்க வேண்டும் என நினைத்தேன். ஏனென்றால் இந்த நேரத்தில் என்னால் மக்களுக்கு நேரடியாக உதவ முடியாது. அதனால் தான் ஜுனகத் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து ரூ.51 ஆயிரத்தை வழங்கினேன்'' என்றார்.
இவர் குஜராத் மாநிலத்தின் மெண்டார்டா சட்டப்பேரவைத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக 1975 ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அனைத்து செய்தியாளர்களுக்கும் கரோனா சோதனை - டெல்லி முதலமைச்சர்