ETV Bharat / bharat

பூரி ரத யாத்திரைக்கு அனுமதி கோரி மனு! - உச்ச நீதிமன்றம்

புவனேஸ்வர்: பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இந்தத் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு திங்கள்கிழமை (ஜூன்22) பட்டியலிடப்பட உள்ளது.

Lord Jagannath Rath Yatra Supreme court Puri Nischalananda Saraswati பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை ஒரிசா ரத யாத்திரை உச்ச நீதிமன்றம் ரத யாத்திரை

author img

By

Published : Jun 20, 2020, 7:10 AM IST

ஒடிசாவில் பூரி ஜெகந்நாத் வருடாந்திர ரத யாத்திரை ஜூன் 23ஆம் தேதி நடக்கவிருந்தது. இந்நிலையில், கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு மத்தியில் ரத யாத்திரை நடத்துவது தனிநபர் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் என்று அரசுசாரா தொண்டு நிறுவனமான ஒடிசா விகாஸ் பரிஷத் என்ற அமைப்பு பொதுநல மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரைக்கு தடை விதித்து வியாழக்கிழமை (ஜூன்19) உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவில், “கரோனா நெருக்கடிக்கு மத்தியில் ரத யாத்திரை நடந்தால், ஜெகந்நாதர் நம்மை மன்னிக்க மாட்டார்” என்று கூறினார். மேலும் ரத யாத்திரையில் ஏராளமான மக்கள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தத் தடை உத்தரவு வெளியான மறுதினமே, உச்ச நீதிமன்றத்தில் அப்தாப் ஹோசன் என்பவர் பொதுநல மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரையை கண்டிப்பாக நடக்க வேண்டும். பக்தர்கள் பங்கேற்காவிட்டாலும் பரவாயில்லை, கோயில் ஊழியர்கள் ரத யாத்திரையை நடத்த அனுமதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கு திங்கள்கிழமை (ஜூன்22) விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று ஹோசனின் வழக்குரைஞர் பிரனாய் மொகபத்ரா கூறினார். இதேபோல், பூரி சங்கராச்சாரியார் நிசலானந்த சரஸ்வதி சுவாமிகளும், “உச்சநீதிமன்றம் தனது முடிவை மறுபரிசீலனை செய்து, தகுந்த முன்னெச்சரிக்கைகளுடன் திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும்” என்று வெள்ளிக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Lord Jagannath Rath Yatra Supreme court Puri Nischalananda Saraswati பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை ஒரிசா ரத யாத்திரை உச்ச நீதிமன்றம் ரத யாத்திரை
பூரி ரத யாத்திரைக்கு அனுமதி கோரி மனு!

மேலும் அவர், “ரத யாத்திரைக்கு அனுமதி அளிக்க வேண்டும். கோயில் நிர்வாகிகள் ரத யாத்திரையை நடத்தினால், பக்தர்களால் வீட்டிலிருந்தபடியே தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை காண முடியும்” என கூறினார்.

பூரி சங்கராச்சாரியார் நிசலானந்த சரஸ்வதி சுவாமிகள் கோவர்த்தன பீடத்தின் மத தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனாவால் மக்கள் பாதிப்பு, சிவசேனா அதிரடி முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.