டெல்லி நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஒரு தடவை உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டில், பிற பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்தக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஏற்றவாறு துணிகளால் ஆன பைகள், பிளாஸ்டிக் அல்லாத பைகள் உள்ளிட்டவை உபயோகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதையடுத்து, பிரதமர் மோடி ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பிளாஸ்டிக் அல்லாத நாடை உருவாக்க வேண்டும், அதையே நமது சாதனையாக மாற்ற வேண்டும் என்றார். அதையும் அக்டோபர் 2ஆம் தேதி 150ஆவது காந்தி ஜெயந்திக்குள் செய்து காட்ட வேண்டும் என்று கூறியிருப்பதற்கு ஏற்றவாறு நாடாளுமன்றத்திற்குள் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.