புபனேஸ்வர்: புபனேஸ்வரில் இருந்து டெல்லி கிளம்பிய விஸ்டாரா விமானம்- யுகே 785 ரக விமானம், புபனேஸ்வரின் பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதை அடுத்து, பயணிகள் பல மணி நேரம் விமான நிலையத்தில் சிக்கித் தவித்தனர்.
எரிபொருள் கசிவு ஏற்பட்டதை விமானிகள் முன்னதாகவே கண்டறிந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மே 31 காலை 11.40 மணியளவில், புபனேஸ்வர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், 25 நிமிடங்களில் எரிவாயு கசிவு காரணமாக தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் 96 பயணிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.