ETV Bharat / bharat

4 மாத குழந்தைக்கு பால் வழங்கிய மனிதநேய காவலருக்கு அமைச்சர் சன்மானம்! - milk packet four-month-old baby

டெல்லி: நான்கு மாத குழந்தைக்கு பால் பாக்கெட் வழங்கிய ரயில்வே காவலரின் மனிதநேயத்தை பாராட்டி ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் சன்மானம் அறிவித்துள்ளார்.

ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்
ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்
author img

By

Published : Jun 5, 2020, 12:23 PM IST

கடந்த 70 நாள்களுக்குள் பசியினால் உயிரிழக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவந்தது. குடிபெயர்ந்த தொழிலாளர்கள் ரயில்வே நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் கேட்பாரற்றுக் கிடந்தனர். பிகாரின் முசாபர்பூர் ரயில் நிலையத்தில் ஒரு சங்கு பால் கூட கிடைக்காமல் நான்கரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் 4 மாத குழந்தைக்கு ரயில்வே காவலர் ஒருவர் பால் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷெரீப் ஹாஷ்மி, ஹசீன் ஹாஷ்மி தம்பதியினர் தனது 4 மாத குழந்தையுடன் பெல்காமில் இருந்து கோரக்பூர் செல்லும் ஷிராமிக் சிறப்பு ரயிலில் சென்றுகொண்டிருந்தனர். ரயில் பயணத்துக்கிடையில் அவரது குழந்தை பசியால் அழுதது. முந்தைய நிலையத்திலும் குழந்தைக்கு பால் கிடைக்கவில்லை. இதனால், தங்களின் நிலையை எடுத்துக் கூறி போபால் நிலையத்தில் இருந்த ரயில்வே கான்ஸ்டபிள் இந்தர் சிங் யாதவிடம் உதவி கேட்டுள்ளனர்.

இதையடுத்து இந்தர் சிங் உடனடியாக விரைந்து போபால் நிலையத்திற்கு வெளியே உள்ள ஒரு கடையில் இருந்து ஒரு பாக்கெட் பால் கொண்டு வந்தார். ஆனால் ரயில் நகரத் தொடங்கிவிட்டது. ஓடும் ரயிலின் பின்னால் ஓடி, ஷெரீப் ஹாஷ்மியிடம் அவர் பால் பாக்கெட்டை வழங்கியுள்ளார்.

  • Commendable Deed by Rail Parivar: RPF Constable Inder Singh Yadav demonstrated an exemplary sense of duty when he ran behind a train to deliver milk for a 4-year-old child.

    Expressing pride, I have announced a cash award to honour the Good Samaritan. pic.twitter.com/qtR3qitnfG

    — Piyush Goyal (@PiyushGoyal) June 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ரயில்வே பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் இந்தர் சிங் யாதவின் மனிதநேயமிக்க இச்செயல் பாராட்டத்தக்கது. இதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அவரை பாராட்டியதோடு, ரொக்க பரிசையும் அறிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: 'அவளுக்குத் தோழியாக இருக்கிறேன்' - சிறுமி மீதான யானையின் பாசம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.